Principal Message
Al-Irshad Maha Vidyalaya
கல்லூரி முதல்வரின் வாழ்த்துச் செய்தி
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ஹாலி-எல பிரதேசத்தில் அமைந்துள்ள பதுஅல்-இர்ஷாத் மகா வித்தியாலயம் சுமார் அரை நூற்றாண்டுகளை கடந்து மாகாண ரீதியிலும் தேசிய ரீதியிலுமாக பல்வேறு துறைகளிலும் தனது பிரபல்ய அடையாளம் முத்திரையை தொடர்ந்து கல்வியில் பதித்து வரும் நிலையில் எமது கல்லூரியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிகழ்வூக்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
நானும் இக்கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் என்ற வகையில் சுமார் 12 வருட காலம் முதல்வராக சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு எல்லாம் வல்ல இறைவனை புகழ்ந்து மன மகிழ்ச்சி அடைகிறேன்.
சுமார் 45 வருட காலமாக இல்லாமல் இருந்த க.பொ.த. உயர் தர கலைப்பிரிவை முதல்வராக கடமையேற்ற வருடத்திலேயே (2011) ஆரம்பிக்கப்பட்டமை இக் கல்லூரியின் சரித்திர முன்னேற்ற பாதையின் மைல் கல்லாகும்.
பல மாணவ மாணவிகள் உயர்தரதர்தில் சித்ததிப்பெற்று பல்கலைகழகங்களில் சிறப்பு துறைகளில் பயின்று பட்டதாரிகளாக வெளியாகியமையும், பயின்று கொண்டு இருப்பதும், கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பயிற்சி பெற்று வெளியாகியமையயும், பயிற்சி பெறுகின்றமையும் மேலும் பல்வேறு துறைகளிலும் முன்னேறி இப் பிரதேச சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் எமது கல்லூரியின் சேவையை யாராலும் மறுக்க முடியாhததாகும்.
எமது கல்லூரியின் சுற்றுப்புறச் சூழல் மாணவர்களின் கற்றலுக்கும் பயிற்சிப்பட்டறைக்கும் ஏற்ற விதமாக வடிவமைக்கப்பட்டு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதுடன் மாணவர் இயற்கையோடு ஒன்றிணைந்து ஒழுக்க விழுமியங்களுடனும் திகழ்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதும் 2016,2018 ஆம் வருடங்களில் தேசிய மட்ட சிறந்த சுற்றாடலுக்கான ஜனாதிபதி விருது எமது கல்லூரிக்கு கிடைத்தமை பெரும் வெற்றியாகும்.
எமது கல்லூரி மாணவர்களின் திறமைக்கு கிடைக்கப் பெற்ற நவீன தொழிநுட்ப புதுமைகளுக்கு ஏற்றவாறு பயனடைய கிடைக்கப்பெற்ற சிறந்த சந்தர்ப்பமாக கருதுகிறேன்.
கல்லூரியின் வெற்றியை நோக்கிய பயணத்தில் பங்கேற்ற அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறுவதில் பெரு மகிழ்வு அடைகின்றேன்.
A.R.M.Rizwan
Principal
Al-irshad M.V