எமது பாடசாலையின் வரலாறு
பசுமை கொஞ்சிடும் ஊவாவின் பதுளை மாவட்டத்தில் ஹாலி -எல பிரதேத்தில் தனிப்பெருமையூடன் திகழ்ந்திடும் எம் கலையகம் ப/அல் இர்ஷாத் மகா வித்தியாலயம் ஆகும். இரீஷாம் இன்று எமது கலையகம் பல்வேறு சாதளைகளுடன் பெருமிழாய் காலெடுத்து வைத்துள்ள இவ்வேளையில் கல்லூரி கடந்து வந்த பாதையினை சற்று நோக்குவோம்.
அந்நாட்களில் எம் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் 17. மக்கள் ஹாலி - எல சிங்கள மகா வித்தியாலயத்திலேயே நமது கல்வியை கற்றுத் கொண்டிருந்தனர். எனினும் சில வேலைப்பாடுகளை கருத்திற்கொண்டு முஸ்லிம் மாணவர்களை முதற்கொண்டு ஒரு முஸ்லிம் பாடசாலையில் கற்க அனுமதி வழங்கப்பட்டது. இது 17-06-1946 இல் நிகழ்ந்தது. என்னும் கட்டட வசதிகள் இன்மையால் சிங்கள மொழி பாடசாலையில் பின்னேற பாடசாலையாக இது இயங்கியது.
வருடவருடம் மாணவர் தொகையும், ஆசிரியர் தொகையும், வகுப்புக்களின் தொகையும் கூடிக்கொண்டே சென்றன. 1952 ஆம் ஆண்டில் 180 பிள்ளைகளும், 2 ஆசிரியர்களும், 5 ஆம் தரம் வரையிலும் காணப்பட்டன. 1953 ஆம் ஆண்டில் இது 200 பிள்ளைகள், 5 ஆசிரியர்கள், 8 வகுப்பு என கூடிச் சென்றன. 1961 இல் மாணவர் தொகை 465 ஆகவும் ஆசிரியர் தொதை 16 ஆகவும் காணப்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும்.
இவ்வாலான சூழ்நிலையில் முஸ்லிம் பெற்றௌரின் அழைப்பின் பேரில் 1961 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதியூநீன் மஃமுத் அவர்கள் ஹாலிஎல நகருக்கு வருகை தந்தார். 1946 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் பாடசாலையாக இயங்கினாலும் முஸ்லிம் தலைமை ஆசரியர் ஒருவர் இல்லாத பெரும் குறையை புற்றி அவரிடம் எடுத்து கூறப்பட்டது.
(சா/த) பரீட்சைக்கு 3 மாணவர்கள் தோற்றினார்கள். 1965-06-25 இல் 2ம் கட்டமாக திறக்கப்பட்டு இரு நேர வகுப்புகளும் கால நேரத்தில் நிழை ஒழுங்கு செய்யப்பட்டது. அன்றைய அதிபராக 5. அப்துல் காதர் அவர்கள் விளங்கினர்இ 1965-09-10 இல் ஜனாப் M. சுபியாள் அவர்கள் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார்.
ஜனாப் I.M. அயூகாஹிர் அவர்கள் 1968-01-08 இல் மீண்டும் இப்பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப் பட்டார்கள். நீர் வசதிகள் போன்ற சுகாதார வசதிகள் இவரது காலத்திலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1974-02-17 சேவையில் இருக்கும் போது இறையடி சேர்ந்தார். (இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்) அதன் பின் உதவி அதியராக S.M.M. சரீப் அவர்கள் 3 மாத கால பாடசாலை நிருவாகத்தை பொறுப்பேற்று நடத்தினார்கள்
அதனை தொடர்ந்து 1974-05-01 ஆம் திகதி ஜனாப் A.M. ஹூசைன் அவர்கள் அதியர் கடமையை பொறுப்பேற்றார்கள். இவரது சேவைக் காலம் வரலாற்றிலே ஒரு பொற்காலமாகும். பல்வேறு விழாக்களும் பல கட்டிட தொகுதிகளின் திறப்பு விழாவு ம் இவரது காலப்பகுகிலேயே நிகழ்ந்தன.
1976 -மனைப்பொருளியல் உபகரண தொகுதி
1977 - புதிய கட்டட திறப்பு விழா.
1978 - சாரனர் படை உருவாக்கப்பட்டது.
1978 - பலகையால் மறைக்கப்பட்ட தற்காலிக ஓலை, கட்டிட திறப்பு விழா.
1979 முதல் ப/அல்-இர்ஷாத் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றம் பெற்றது, நூலகங்களுக்கு நூல்கள் பெறப்பட்டமை, மைதானம் வெட்டப்பட்டமை என்பன குறப்பிடத்தக்கவை. ஓலை கட்டிடமும் 1980 ஆம் ஆண்டில் நிரந்தர கட்டிடமாக மாற்றப்பட்டது.
1981 ஆம் ஆண்டு அதிபர்இ A.M. ஹூசைன்
யேற்றார்கள். இவரது காலத்தில் இணைப்பாட விதான செயல்பாடுகளில்இ மானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கரம் 5 புலமைபரிசில் பரீட்சைஇ க.பொ.த.(சாஃத) பரிட்சைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.
மேலும் 60x20 கட்டிடம், பூதுப்பிக்கப்பட்டமையூம் 2 மாடி கட்டிடத்கின் மேல் மாடி கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டமையும், புதிய விஞ்ஞான ஆய்வூக்கூடமும் இவரது காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டமையூம் குறிப்பிடத்தக்கது.
இவரின் இடமாற்றத்தை தொடர்ந்து ஜனாப் A.R.M. ரிஸ்வான் அவர்கள் 2011.01.97 ஆம் திகதி அதிபராக கடமையை பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து மாணவர்களின் கல்வியின் முன்னேற்றம், ஆசிரியர்களுக்காக வேலைப்பகிர்வு, பெற்றௌர்களுக்கான கல்வி அபிவிருக்தி கட்டங்கள், சிறந்த சுற்றாடலை உருவாக்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள்இ பாரிய குறைபாடாக இருந்த உயர்கர க.பொ.த. வகுப்பை ஆரம்பிக்கப்பட்டதற்கான பாரிய முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்தமையை விசேடமாக குறிப்பிடத்தக்கது
பாடசாலையின் பல வருட காலங்களாக ஆரம்பித்த முடியாதநிலையில் இருந்த க.பொ.க உயர்தர கலைப் பிரிவை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 2011.05.12. ஆம் திகதி ஆரம்பித்த வெற்றி இவ்வதிபரையே சாரும். இதன் காரணமாக 1C பாடசாலையாக தரம் உயர்த்தபட்டத்தையும் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இதன் காரணமாக இப் பிரதேசத்திலிருந்து பல்கலைகழகம் செல்லும் மாணவர்களும் உயர்தரம் சித்தியடையூம் மாணவர்களின் தொகையூம் உயர்ந்து செல்வது விசேடமாக குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவர்களின் கல்வி முனனேற்றத்திற்காக நவீன தொழிநுட்ப வசதிகளான கணினி இயந்திரங்கள், டெப் கணிணிகள், பல் ஊடக இயந்திரங்கள். இணைய இணைப்பு என்பன மாணவர்களுக்கு கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதமாகும்
20ஒ20 காரியால தட்டிடம்இ 100ஒ25 புதிய நவீன வகுப்பறை கட்டிடம் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளமையும், 60x20 வருப்பறை கட்டிடமும்இ 80ஒ20 வாசிகசாலை கட்டிடமும் புதுப்பிக்கப்பட்டமையூம்இ புதிய நவீன மலசலகூட தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டமையூம் இவ்வதிபரின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு பாரிய அபிவிருத்தித்; திட்டங்களாகும்.
இதனை தொடர்ந்து பாடசாலையின் சுற்றாடலை முழுமையாக மாற்றியமைத்து மாணவர்களுக் கிடையே சுற்றாடல் நேய குழுக்களை அமைத்து பயிற்சிகள் வழங்கி பாடசாலை சூழலை ஊவா மாகாணத்தில் மீட்டும் மன்றி அகில இலங்கை ரீதியிலும் போட்டியிட்டு 2016,2019 வருடங்களில் ஜனாதிபதியால் சிறந்த சூழலுக்கான விருது வழங்கி கௌரவ விக்கபட்டமை சிறந்த சூழலுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
மேலும் உற்பத்தி திறன் போட்டி நிகழ்ச்சியில் 2019 ஆம் வருடத்திலிருந்து தொடர்ச்சியாக தேசிய மட்டத்தில் வெற்றியீட்டி 2018 வருடத்தில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்தமை இப் பாடசாலையின் முன்னேற்ற பாதைக்கு ஒரு மைல் கல்லாகும்.
இப் பாடசாலை கொடர்ச்சியாக தமிழ் மொழி தின, சிங்கள மொழி தின, ஆங்கில மொழி தின போட்டி நிகழ்ச்சகரில் வலய, மாகாண, தேசிய ரீதியில் பெயர் பதிந்து 2017x2018 ஆம் வருடங்களில் உவா மாகாண மீலாத் போட்டி நிகழ்ச்சியில் மாகாணத்தில் மிக கூடிய இடங்களை வெற்றிகொண்டு மாகாணத் தில் முதல் இடத்தை சுவிகரித்த பெருமை இப்பாடசாலையை சாரும்..