மாணவர் ஒழுக்கக் கோவை
01.சகல மாணவர்களுக்கும் மு.ப 7.00 மணிக்கு முன் பாடசாலைக்கு சமூகம் அளிக்க வேண்டும்.அத்துடன் உள் வெளிச் சுத்த வேளைகளில் ஒத்துழைத்து உரிய பாட வேளையில் பாடச் ஏற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு உதவ வேண்டும்.
2.பாடசாலைக்கு புகைப்படக் கருவிகள் கையடக்க தொலைபேசிகள் இருவட்டுக்கள்(CD/DVD) கைக்கடிகாரங்கள் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் படங்கள் பொருத்தமற்ற கைக்குட்டிகள் போன்றவற்றை கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
03. திங்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் முற்பகல் 7.15 மணிக்கு மணி அடிக்கப்பட்டு முறையே காலை கூட்டம் சமய ஆராதனை மாணவர் சமய நிகழ்ச்சி என்பன நடைபெறும்.
04.இனிய நாட்களில் மு.ப 7.20 மணிக்கு மணி அடிக்கப்பட்டு காலை ஆராதனையுடன் பாட செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
05. மாணவர் வரவு இடாப்புகள் உரிய நேரத்தில் பதியப்பட்டு இரண்டாம் பாட வேளை ஆரம்பமாவதற்கு முன் வகுப்புத் தலைவர்களினால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
06.வகுப்பறை பாடப்பதிவு புத்தகங்கள் இறுதிப் பாடவேளை நிறைவு பெற்றவுடன் வகுப்பு தலைவர்களினால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
07.மாணவர்கள் மாணவத் தலைவர்களுக்கும் வகுப்பு தலைவர்களுக்கும் கீழ்படிவதுடன் தரக்குறைவாக நடந்து கொள்வது தவிர்க்கப்படல் வேண்டும்.
08.வகுப்பறைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் சுத்தமாகவும் கவர்ச்சிகரமானதுமாக காட்சியளிப்பதற்கு சகல மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
09.வகுப்பறைகளில் இருந்து வெளியில் வருவதற்கான Exit அட்டை இன்றி வெளியில் நடமாடுபவர் அதிபர் அல்லது பிரதி அதிபர் அல்லது ஆசிரியர்களால் தண்டிக்கப்படுவார்.
10. விஞ்ஞான ஆய்வுக்கூடம் அல்லது மனவியல் செயற்பாட்டறை அல்லது வேறு இடங்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக செல்லும் மாணவர்கள் வகுப்பு தலைவர்களின் கண்காணிப்பில் வரிசையாக ஒழுங்காக செல்ல வேண்டும்.
11.இடைவேளையின் போது மாத்திரமே மாணவர் சிற்றுண்டிச்சாலைக்கு வர அனுமதிக்கப்படுவர்.
12.மாணவர் தங்களது உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை வீட்டில் இருந்தே கொண்டு வர வேண்டும்.
13.இடைவேளை முடிவடைவதற்கான முதலாவது மணி அடைத்தவுடன் மாணவர் அமைதியாகவும் வேகமாகவும் வகுப்பறைகளை அடைந்து விட வேண்டும் இரண்டாவது மணி அடித்தவுடன் கற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
14. தவிர்க்க முடியாத காரணங்களால் பாடசாலையை விட்டு வெளியில் செல்ல வேண்டி ஏற்படின் பெற்றார் அல்லது பாதுகாவலர் அல்லது பொறுப்பான ஒருவருடன் அன்றி மாணவர் எவ்விதத்திலும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.
15.பாடசாலைக்கு வராத மாணவர்கள் பெற்றார் அல்லது பாதுகாவலரின் கையொப்பத்துடன் கூடிய கடிதத்துடன் 5 நாட்களுக்கு மேல் வராதவர்கள் பெற்றாருடன் வந்து அதிபரிடம் அனுமதி பெற்று வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.
16. பாடசாலை வளைவில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஒவ்வொரு நாளும் சேரும் கழிவுகள் உரிய வகுப்பு மாணவர்களால் அன்றைய தினத்திலேயே அகற்றப்படல் வேண்டும்.
17.பாடசாலைக்கு பொழுதின் பதார்த்தங்கள் கொண்டு வருதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
18.பாடசாலை விடுவதற்கான முதல் மணி அடித்தவுடன் மாணவர்கள் தங்களது உடைமைகளுடன் அமைதியாக எழுந்து நிற்றல் வேண்டும்.இரண்டாவது மணி அடித்தவுடன் ஒருமித்த குரலில் துவாவையும் ஸலவாத்தையும் ஓத வேண்டும். மூன்றாவது மணி அடித்தவுடன் வகுப்பு வாரியாக மாணவிகள் முதலாவதாகவும் அதனைத் தொடர்ந்து மாணவர்களும் அமைதியாக செல்ல வேண்டும்.
19.வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் முதலாவதாகவும் அதனைத் தொடர்ந்து மாணவிகளும் வெளியேற வேண்டும்.
20.மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளி வெளியேறும் போதும் வகுப்புகளை நோக்கி வரும்போதும் அம்புக்குறிகள் காட்டப்படும் பாதையை பயன்படுத்த வேண்டும்.
21.பாடசாலை உடைமைகளை சேதப்படுத்தல் தண்ணீரை வீண்விறரயம் செய்தல் பூப்பாத்திகள் மற்றும் மரக்கறிகள் பாத்திகளை சேதப்படுத்தல் போன்றவை கடும் தண்டனைகளுக்குரிய குற்றங்கள் ஆகும்.
5t
22. பாடசாலை வளவினுள் Chewing gum சப்பிக்கொண்டிருப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.